தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றது.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற இத்தொடரில் தஞ்சாவூர், அதிராம்பட்டினம், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்குபெற்று விளையாடின.
இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அதிரை WFC அணி பட்டுக்கோட்டை கால்பந்து கழக அணியுடன் இறுதி ஆட்டத்தில் விளையாடியது.
ஆட்டநேர இறுதியில் பட்டுக்கோட்டை கால்பந்து கழக அணி 3-1 என்ற கோல் கணக்கில் WFC அதிரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம் பட்டுக்கோட்டை கால்பந்து கழக அணி முதல் பரிசையும், அதிரை WFC அணி இரண்டாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.
Your reaction