தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் 31/08/2019 பட்டுக்கோட்டை கிளையின் சார்பில் பள்ளிவாசல் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறிதல் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமையிலும், மாவட்ட தலைவர் அதிரை ராஜிக், மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்ஷா, மாவட்ட துணைச்செயலாளர் ஆவணம் ரியாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையாளர் திரு பாஸ்கர் அவர்கள் பங்கேற்றார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் S.R. ஆயில் நிறுவன உரிமையாளர் திரு S.R.ரகு அவர்களும், சமூக ஆர்வலரும் காங்கிரஸ் பிரமுகருமான திரு A.K.குமார்,கலாம் நண்பர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், முஸ்லிம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வைரமணி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பட்டுக்கோட்டை மற்றும் பல்வேறு கிளைகளின் உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் இரத்ததான கொடையாளர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.,
மேற்படி இரத்ததான முகாமில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு #55யூனிட் இரத்தக் கொடை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
இதில் மாவட்ட தொண்டரணி கான்,கிளை தலைவர் பாரூக்,சித்திக்,பத்ருதீன்,யஹ்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்…
Your reaction