தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணிலிருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகியது.
நேற்று இரவு(16-08-2019) பேராவூரணியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற தனியார் சொகுசு பேருந்து கடலூர் அருகே விபத்துக்குள்ளானது.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பேருந்து வேகமாக வந்தபோது சாலையில் நடுவே அமைந்துள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சிக்கி பேராவூரணி வீரியங்கோட்டையை சேர்ந்த பொறியல் பட்டதாரி ஹரிணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்தை இயக்கிய ஓட்டுநர் உட்பட பயணம் செய்த 20க்கு மேற்பட்ட பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Your reaction