பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 250 க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய அனைருக்கும் பாரபட்சமின்றி கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் இன்று ஈசிஆர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அரை மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தால் ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Your reaction