மதமில்லா மனித நேயத்தை விதைத்த அதிரை CBD அமைப்பினர்..!!

1566 0


அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளி கொல்லைகாடு கிராமத்தில் கஜா புயலால் வீட்டை இழந்து வறுமையில் வாடிக் கொண்டு அருகில் இருக்கக்கூடிய பக்கத்து வீட்டில் வசித்து வந்த (லேட்)சண்முகம் நாடார் அவர்கள் மனைவி அபூர்வம் அம்மையார்

நேற்று(26.12.2018) இரவு இறந்து விட்டார்கள்.

அவர்களுடைய இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லாமல் வறுமையால் வாடிய அந்த குடும்பத்தினர் அதிராம்பட்டினம் CBD அமைப்பினரை அணுகி மனித நேயத்தோடு அந்த பாட்டி உடைய இறுதி சடங்கினை நடத்த கோரிக்கை வைத்தனர்.

அதனடிப்படையில் CBD மாவட்ட தலைவர் பேராசிரியர்
செய்யது அஹமது கபீர்

நகர பொறுப்பாளர் அமீர் அலி,
ஆரிஃப், பைசல்,
சாகுல் ஹமீது,
சிராஜ், ஹாஜா,

பேராவூரணி CBD பொறுப்பாளர் கனகராஜ்
ஆகியோர் இறுதி சடங்கிற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து மேளதாளம் இசைக்க அனைத்து மரியாதையோடும்
அந்த பாட்டியின் உடல் தகனம் செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செய்தனர்.

பின்னர் இந்த செய்தியை அதிராம்பட்டினம் பைத்துல்மால் நிர்வாகிகளிடம் கூறி அவசர ஊர்தி ஆம்புலன்ஸ் கேட்டதற்கு எவ்விதமான கட்டணமும் இன்றி மனித நேயத்தோடு இந்த இறுதிச் சடங்கு நடக்க உதவினர்.

இறுதிச்சடங்கில் CBD நிர்வாகிகள் கலந்துகொண்டு பூரண மரியாதையோடு அந்த பாட்டியின் பூதவுடல் சுடுகாட்டில் பாட்டியின் மருமகன் செல்லப்பாவால் எரியூட்டப்பட்டது.

இறுதிச் சடங்கிற்கான அத்தனை செலவுகளையும் CBD நிர்வாகம் முழுமையாக ஏற்றுக் கொண்டது.

கஜா புயலின் கோரப்பிடியில் உருக்குலைந்து சின்னாபின்னமாகிப்போன அந்த பாட்டியின் வீட்டை அவரது மகள் செல்விக்கு புனரமைத்து கொடுக்கவும் CBD நிர்வாகம் ஆயத்தமாக உள்ளது.
இந்த மதம் கடந்த மனித நேய பணிக்கு CBD க்கு உதவிய அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு எவ்வித கட்டணமும் வேண்டாம் இதில் எங்களுடைய பங்களிப்பும் இருக்கட்டும் என்று கூறி மனிதத்தை வெளிப்படுத்தினர்.

கிரசண்ட் பிளட் டோனர்ஸ் சார்பாக அதிரை பைத்துல்மாலுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: