சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பதவி வகித்த பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வுபெறும் நிலையில், அவர் இன்னும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக பணியை தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் என்ற அதிகாரியை தமிழக அரசு பணி நியமனம் செய்திருந்த நிலையில், பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக செயல்பட உள்ளார். அபய்குமார் சிங்கிற்கு பொன்.மாணிக்கவேல் ரிப்போர்ட் செய்ய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக அரசு முயற்சிகளுக்கு உயர் நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Your reaction