தஞ்சை ஆசிரியை கழுத்தறுத்து கொலை!!

1702 0


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள 108 சிவாலயம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (24). கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்றுமாலை கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் காவிரி ஆற்றின் படித்துறையில் மர்மமான முறையில் கழுத்தில் கத்தியால் அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று வசந்தபிரியாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், வசந்தபிரியாவுக்கும் வலங்கைமானைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28 ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் சம்மந்தமே இல்லாமல் காவிரி ஆற்றின் கரையில் கத்தியால் கழுத்து அறுத்துக்கிடந்தார். ஒரு இளைஞருடன் பைக்கில் சென்றிருப்பதை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த இளைஞர் யார், அங்கு யாரால் கொலை செய்யப்பட்டார் எனவும் விசாரித்து வருகின்றோம் என்றனர்.

கொலை செய்யப்பட்ட இடத்தில் இரண்டு செல்போன்கள், பேனாகத்தி ஆகியவைக்கிடந்ததை திருவிடைமருதூர் போலீஸார் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று புதுக்கோட்டை இளம் பெண் மர்மமான முறையில் மல்லிப்பட்டினம் பகுதியில் கொலைசெய்யப்பட்டு சாக்குமூட்டையில் கிடந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் கும்பகோணத்தில் ஆசிரியை கொலையாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: