நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு விழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ளாததால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோபமடைந்தார்.
வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மருத்துவமனை அருகே இருந்த மேடை நோக்கிச் சென்றார்.
பந்தலில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மட்டும் இருந்ததைக் கண்ட அமைச்சர், கிராம மக்கள் எங்கே என அதிகாரிகளைப் பார்த்து கேள்வி எழுப்பினார். மேலும் மக்கள் இல்லாமல் விழா எதற்கு என கேள்வி எழுப்பிய அவர், மக்களை அழைத்துவரும் வரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் எனக் கூறியாதோடு, உடனடியாக மக்களை அழைத்து வருமாறு கூறினார்.இதையடுத்து அரசு வாகனங்களில் சென்ற அதிகாரிகள் மக்களை விழாப் பந்தலுக்கு அழைத்து வந்தனர்.
Your reaction