அதிரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் அதிரை கடற்கரைத் தெரு பகுதியில் மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. அதிரை பேரூராட்சியின் சார்பில் முறையான வடிகால் வசதி செய்யப்படாததே இம்மழைநீர் தேங்கி நிற்பதற்கு காரணம்.
கடற்கரைத்தெருவில் மழைநீரோடு கழிவுநீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அதிரை பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அப்போது, கடற்கரைத்தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீரோடு கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. பலமுறை அதிகாரிகளை அணுகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வரும் 7ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்டு இருக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் முறையான வடிகால் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
Your reaction