ஹைதராபாத் நகருக்கு ‘உணவுக் கலையின் நகரம்’ என சிறப்பு அங்கீகாரம் வழங்கிய யுனெஸ்கோ !

Posted by - November 3, 2019

ஹைதராபாத் நகரத்துக்கு ‘உணவுக் கலையின் நகரம்’ என்ற சிறப்புப் பட்டத்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது. ஹைதரபாத் நகருக்கு இப்படியொரு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதை இந்திய உணவுப் பிரியர்கள், சமையல் கலை வல்லுநர்கள் என அனைவரும் ஒருசேர வரவேற்றுள்ளனர். உலகப் பிரசித்திப் பெற்ற ஹைதராபாத் பிரியாணி, ஹலீம், நிஹாரி என அத்தனை உணவு ரகங்களுமே ’டாப் க்ளாஸ்’ பட்டியலைச் சார்ந்தவை. மெயின் டிஷ் உணவுகளுக்கு மட்டுமல்லாமல், குருமா, தயிர் ஊற்றி செய்யப்படும் கறி, சூக்கா மட்டன் என ஹைதராபாத்தில் சமைக்கப்படும்

Read More

சீக்கியர்களை வரவேற்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்….!

Posted by - November 3, 2019

சீக்கிய யாத்ரீகர்களை வரவேற்க கர்தார்பூர் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தமது கடைசி காலத்தை பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்திலுள்ள கர்தார்பூரில் கழித்தார். இதன் நினைவாக அங்கு கட்டப்பட்டுள்ள குருத்வாராவுக்கு சீக்கியர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் விசா இல்லாமல் செல்லும் வகையில் கர்தார்பூர் குருத்வாராவுக்கும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்திலுள்ள குருத்வாராவுக்கும் இடையே வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடம்,  நவம்பர் 12ம் தேதி திறந்து

Read More

சாயம் பூசுவதை விடுத்து திருக்குறளை படித்து திருந்துங்கள் – ஸ்டாலின் சாடல் !

Posted by - November 3, 2019

பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து படம் பதிவிடப்பட்டிருந்தது. மேலும், ‘கற்றதனால் ஆய பயனென்கொல் வாலரிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ என்ற குரள் கூறப்பட்டு குறளுக்கான விளக்கம் ஒன்றையும் பதிவிட்டிருந்தது. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின் கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த

Read More

மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்கு அதிநவீன ரோந்து படகு தேவை,ஜலீல் முகமது கோரிக்கை…!

Posted by - November 3, 2019

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் புதிய துறைமுகத்திற்கு பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பதற்கு நவீன ரோந்து படகு அத்தியாவசியமானது என்பதால் அரசு உடனடியாக பரிசீலக்க வேண்டும் என்று M.ஜலீல் முகமது கோரிக்கை. மழை,புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை உடனடியாக உயிருடன் மீட்பதற்கு புதிய துறைமுகத்தில் அதிநவீன ரோந்து படகு வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும், இதனை முதலமைச்சர், துணை முதல்வர்,மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் பரிசீலித்து உடனடியாக செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Read More

திருவள்ளுவருக்கு காவி வண்ண உடை… கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய தமிழக பாஜக !

Posted by - November 3, 2019

தமிழக பாஜக கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தாய்லாந்தில் 3 நாள் அரசுமுறை சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.அங்கு இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றாார். அந்த விழாவில் திருக்குறளின் ‘தாய்’ மொழி பெயர்ப்பையும் மோடி வெளியிட்டார். இது பெரிய வரவேற்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழக பாஜக கட்சி இது தொடர்பாக வெளியிட்ட செய்தி டிவிட் ஒன்று பெரிய சர்ச்சையை

Read More

மல்லிப்பட்டிணத்தில் படுஜோராக விற்பனையாகும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்…!

Posted by - November 3, 2019

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் தடைசெய்யப்பட்ட தங்கு தடையின்றி அமோகமாக நடைபெற்று வருகிறது. மல்லிப்பட்டிணம் பகுதிகளில் பொது இடங்களில் எந்தவித அச்சமின்றி தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்து வருகின்றனர். லாட்டரி சீட்டு விற்பனையின் மூலம் முதியவர்கள்,இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த லாட்டரி விற்பனையை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்வது கிடையாது என்றும்,அவர்களின் துணை கொண்டே நடத்தப்படுகிறதோ என்று  பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மாவட்ட அதிகாரிகள் உடனடியாக லாட்டரி சீட்டு விற்பனையை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)