11, 12ம் வகுப்பு தேர்வு முறைகளில் வருகிறது அதிரடி மாற்றங்கள் !

5177 0


தமிழகத்தில் தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 6 பாடங்கள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே, மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள்கள் இருந்த நிலையில், அது இனி ஒரே தாளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன. 6 பாடங்கள் 5 ஆக குறைகின்றன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2-வில் இனி உயிரியல் பாடம் படிக்கத் தேவையில்லை. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் என்று 5 பாடங்கள் மட்டும் படித்தால் போதும்.

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2-வில் கணிதம் படிக்கத் தேவையில்லை. தமிழ், ஆங்கிலம், உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய 5 பாடங்கள் படித்தால் போதும்.

விரைவில் தேர்வு அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த மாற்றம், நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவிப்பில் கூறியுள்ளது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: