பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக மீனவர் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ![படங்கள்]

1204 0


தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பட்டுக்கோட்டை மினிப்பிரியா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் இச்சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வேணுகோபால், மாநில செயலாளர் ஆ. தாஜுதீன், இராமேஸ்வரம் என். தேவதாஸ், நாகப்பட்டினம் சிட்டிலிங்கம், புதுகோட்டை செல்லத்துரை, கன்னியாகுமரி அருளானந்தம், கடலூர் சுப்பராயன், தஞ்சாவூர் வடுகநாதன், மண்டபம் பாலன், காரைக்கால் சிவசுப்பிரமணியன், விழுப்புரம் வேலு, சோலியக்குடி ராசேந்திரன், தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு சங்கம் நாகராஜ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கும் , ஓகி புயலில் இறந்த மீனவர்களுக்கும் , மறைந்த முன்னாள் மீனவர் சங்க நிர்வாகிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது :

1. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விஷம் போல் ஏறிவருவதால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, எனவே மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலை மீனவர்களுக்கு அதன் உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும்.

2. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத் தர வேண்டும். மேலும் முழுமையாக சேதமடைந்த படகுகளை சீரமைக்க படகு ஒன்றிற்கு ரூ.30 லட்சம் வழங்க வேண்டும்தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பட்டுக்கோட்டை மினிப்பிரியா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் இச்சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வேணுகோபால், மாநில செயலாளர் ஆ. தாஜுதீன், இராமேஸ்வரம் என். தேவதாஸ், நாகப்பட்டினம் சிட்டிலிங்கம், புதுகோட்டை செல்லத்துரை, கன்னியாகுமரி அருளானந்தம், கடலூர் சுப்பராயன், தஞ்சாவூர் வடுகநாதன், மண்டபம் பாலன், காரைக்கால் சிவசுப்பிரமணியன், விழுப்புரம் வேலு, சோலியக்குடி ராசேந்திரன், தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு சங்கம் நாகராஜ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா , கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கும் , ஓகி புயலில் இறந்த மீனவர்களுக்கும் , மறைந்த முன்னாள் மீனவர் சங்க நிர்வாகிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது :

1. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை விஷம் போல் ஏறிவருவதால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, எனவே மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலை மீனவர்களுக்கு அதன் உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும்.

2. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத் தர வேண்டும். மேலும் முழுமையாக சேதமடைந்த படகுகளை சீரமைக்க படகு ஒன்றிற்கு ரூ.30 லட்சம் வழங்க வேண்டும்.

3. மேலே கண்ட தீர்மானங்களை மத்திய மாநில அரசுகள் ஒருவார காலத்திற்குள் தீர்க்க்படவில்லையென்றால் அரசுகளை வலியுறுத்தும் விதமாக வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

4. இரண்டாம் கட்டமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் வருகிற 08.10.2018 அன்று நடத்துவது என்றும், உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் அனைத்து படகுகளின் உரிமத்தை(R.C. book) மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் ஒப்படைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

5. மேலே கண்ட போராட்டங்களுக்கு அரசு செவிசாய்க்கவில்லையென்றால் தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்ட மீனவர்கள் ஒன்று கூடி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களின் ஒத்துழைப்புடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

6. பல மாதங்களாக நடைபெறும் மீனவர்களின் நியாயமான போராட்டத்திற்கு மத்திய அரசு மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால் டெல்லியில் உள்ள பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகளின் துணையோடு முற்றுகையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: