அக்டோபர் 7ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு சம்மந்தமாக அதிரை நகர கிளை மமக, தமுமுக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நேற்று (15-9-2018) சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு துவங்கியது.
பின்னர் நகர அலுவலகத்தில் மமக செயலாளர் இத்ரீஸ் அகமது மற்றும் தமுமுக தலைவர் கல்லுக்கொல்லை சாகுல் ஹமீது, தமுமுக செயலாளர் கமாலுதீன் , மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் O.M.செய்யது முஹம்மது புஹாரி ஆகியோரின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எதிர்வரும் அக்டோபர் 7ம் தேதி மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கு நாற்பதுக்கும் மேற்பட்ட வேன்களில் செல்வதாகவும், திருச்சியில் நடைபெறவுள்ள அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் (30-09-2018) ஞாயிற்றுக்கிழமையன்று அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.
இப் பொதுக் கூட்டத்திற்கு கோவை.செய்யது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிரை தமுமுக மற்றும் மமக கிளை நிர்வாகிகள், வார்டு கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Your reaction