தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மழவேனீற்க்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு நூலகம் கடந்த 8 வருடங்களாக பூட்டிய நிலையில் உள்ளது.
கடந்த 2010 ம் ஆண்டுகளில் நடுவிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நூலகம் மிக சிறப்பாக செயல்ப்பட்டு வந்தன.
இந்நூலகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்தது.
கதை ” கவிதை ” கட்டுரை ” இலக்கியம் ” நாவல் என பல நூல்களும் இந்நூலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினர் .
அதுமட்டுமின்றி பல சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் என பல ஆர்வலர்கள், ஊர்வாசிகள் என அனைவரும் பயின்றனர் .
கடந்த ஆண்டு 2010 ஆண்டு முதல் இந்நூலகம் காரணமின்றி மூடப்பட்டு இன்றுவரை திறக்கப்படா நிலையில் உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வரை நூலகம் மீண்டும் செய்ல்படுமாறு ஊர் வாசிகளும் நடுவிக்காடு அம்பலக்காரர் அறக்கட்டளை அமைப்பு மற்றும் பசுமை நண்பர்கள் அமைப்பின் சார்பாகவும் கேட்டுக்கொள்ப்படுகிறது.
Your reaction