தமிழ்கணிமைக்கு அதிரையர் ஆற்றிய பங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும் !

1468 0


விரல் நுனியில் தமிழ்த்தவழும் இன்றைய நவீன உலகில், இதற்க்கு அச்சாரமிட்ட ஒருவரை நினைவு கூறுவோம்!

கணினித்துறையில் தொண்டாற்றிவந்த கணிஞர் உமர்தம்பி அவர்கள் 2006 ஜூலை 13ல் இயற்கை எய்தினார்.

தமிழ்கணினிக்கு இவர் ஆற்றிய சேவை மிகவும் பெரியது. தமிழ் யுனிகோடை இணையத்தில் பலரும் பயன்படுத்த பல செயலிகளையும் எழுத்துருக்களையும் உருவாக்கியதுடன் உதவிக்கட்டுரைகளையும் எழுதிய வள்ளல் ஆவார்.

மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தயாரிப்பு உலாவிகளில் மட்டும் தொழிற்படக்கூடிய வெஃப்ட் என்ற தொழிநுட்பத்தை பயன்படுத்தி, தமிழ் எழுத்துரு கணினியில் நிறுவப்படாத நிலையிலும் கூட தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாலமைந்த இணையத்தளங்களை மைக்ரோசொஃப்ட் உலாவிகளில் படிக்கும் வசதியை இவ்வெழுத்துரு வழங்குகிறது.

தேனீ எனப்படும் இவரது தயாரிப்பான எழுத்துருவை இவ்வாறு இயங்கு எழுத்துருவாக பல்வேறு இணைய முகவரிகளில் பயன்படுமாறு மாற்றி வெளியிட்டார்.

இன்று தமிழ் வலைப்பதிவு உலகில் பெரும்பாலானவர்கள் இந்த வசதியை தமது வலைப்பதிவுகளில் கொண்டிருக்கிறார்கள்.

கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்த சகோதரர் உமர் அவர்கள் தமிழ் இணைய அகராதியைக் கொண்டுவந்தார்.

அவர் கணினி உலகிற்கு ஆற்றிய பணிகளை போற்ற அவரது நினைவு நாளில், உமர்த்தம்பி பெயரில் விருது வழங்க அரசுக்கு கோரிக்கை வைப்போம் !


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: