அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டி தரும் ஊர்களில் அதிரைக்கு என தனியிடமுண்டு ! ஆம் உலகில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் அதிரையர்கள் வியாப்பித்துள்ளனர் அவர்கள் ஈட்டும் பொருளாதாரத்தில் ஒரு பங்கை இந்திய அரசுக்கு வரியாக செலுத்தி வருகின்றனர்.
இவர்கள் இந்திய நாட்டு விமான சேவைகளையே அதிகம் விரும்புகின்றனர். காரணம் உள்நாட்டு விமானம் என்ற ஒரே காரணத்தால்.
ஆனால் இந்திய விமான நிறுவனங்கள் பயணிகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை !
அந்த வகையில் அதிரையை சேர்ந்த சஃபீர் என்பவர் துபாயில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் எக்கனாமிக் வகுப்பில் பயணம் செய்தார் அதில் பயணிகளுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டுள்ளது.
அதனை பெற்று அதில் உள்ள காலாவதி தேதியை பார்த்துள்ளார் சஃபீர், அதில் காலாவதி திகதி முடிந்து ஒரு வாரகாலம் ஆகி இருந்த நிலையில், விமான சிப்பதிகளிடம் இது குறித்த புகாரை தெரிவித்தார்.
ஆனால் இப்புகார் மீது நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் புறம்தள்ளியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் விமான நிலைய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ரும் செவிடம் காதில் ஊதிய சங்காக உள்ளன.
இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் இணைய செய்தி ஊடகத்தை அணுகிய நிலையில், அவருக்கு தகுந்த உதவிகளை செய்ய அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் தயாராகி வருகிறது.
அதன்படி இன்று மாலை எர் இந்தியா நிர்வாக இயக்குநரை சந்தித்து புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Your reaction