காவிரி விவகாரம் : தமிழ்நாடு போட்டோ,வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு அழைப்பு !

1529 0


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் , ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் , ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் , ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடகோரியும் மத்திய , மாநில அரசுகளை கண்டித்து தஞ்சையில் வருகிற (23.04.2018) திங்கட்கிழமை காலை 8 மணியிலிருந்து தமிழ்நாடு போட்டோ , வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறஉள்ளது.

இப்போராட்டம் தஞ்சை ரயில்வே ஸ்டேஷன் அருகே நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் கலந்துக்கொள்ள தமிழ்நாடு போட்டோ , வீடியோ கலைஞர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: