தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் , தமிழகத்திற்கு மோடி வருகையை கண்டித்தும் பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலரும் போலீசாரால் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர்.
இதை தொடர்ந்து, பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பிரமூகர்கள் இன்று கருஞ்சட்டை அணிந்தும் ,கருப்பு பலூன் பறக்கவிட்டு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து கொடி கம்பங்களில் கருப்பு கொடி ஏற்றி கண்டணத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில், தமுமுக & மமக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது புஹாரி, தஞ்சை மாவட்ட துணை செயலாளர் சேக்காதி மற்றும் பல உறுப்பினர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
Your reaction