கணிதம் தேர்வு சரியாக எழுதாததால் +1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றதை அடுத்த மொண்டியம்மன் நகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனது மனைவியுடன் மணிப்பூர் மாநிலத்தில் தங்கி,தச்சு வேலை செய்து வருகிறார்.இவருடைய மகள் சர்மிளா வயது 16 இவர் மட்டும் அதே தெருவில் உள்ள தனது உறவினர் பெரியசாமி என்பவரின் வீட்டில் தங்கி,அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார்.
தற்பொழுது +1 வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த 20ம் தேதி கணித தேர்வு நடைபெற்றது. அதில் வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும் இதனால் சர்மிளா கணித தேர்வு சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் மிகுந்த மனவருத்தில் இருந்த சர்மிளா நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Your reaction