தஞ்சை மாவட்டம்; அதிரையில் வட்டி வாங்குவதும் , வட்டி கொடுப்பது, வட்டி வாங்க தூண்டுவதும், அதற்க்கு ஆதரவு அளிப்பதும் இஸ்லாமியர்களுக்கு தடை செய்யப்பட்ட ஒன்று மட்டுமின்றி , கொடூரமான பாவம்.
ஆகவே,இஸ்லாமியர்கள் பலர் வட்டி வாங்காமல் இருப்பதற்காக அந்த பொருளை விற்பதற்கும் தயங்க மாட்டார்கள்.
இந்நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியாகும்.
இங்கு இஸ்லாமியர்கள் வட்டி வாங்குவதை தடுப்பதற்கு பலர் இணைந்து களம் இறங்கி அதன் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பள்ளிவாசல் வாயில்கலில் நின்று பலர் தங்களுடைய கடைகளின் விளம்பரம் போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்வார்கள்.இதற்க்கு உரிய அனுமதியை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பெற்றுக்கொள்பவர்களும் உண்டு.
இந்நிலையில் நேற்று(16/03/2018) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது ஒரு சில மர்ம நபர்கள் தங்களுடைய வட்டி கடை நிறுவனத்தின் விளம்பரத்தை ஒவ்வொரு இருசக்கர வாகனத்திலும் மாட்டி வைத்து சென்றுள்ளனர்.
இதனால் பள்ளிவாசல் நிர்வாகத்தையும் குறைகூற முடியாது.
வட்டியை ஒழிக்க முதல் படியாக இருக்கும் பள்ளிவாசல் அருகாமையிலேயே வட்டி குறித்து துண்டு நோட்டீஸ் வளங்கியதால் அப்பகுதியில்(பெயர் குறிப்பிடபடவில்லை) மக்களிடையே பெரும் பரபரப்பை நிலவியது.
இந்நிலையில், துண்டு நோட்டீஸ் வழங்க பள்ளி நிர்வாகிகத்திடம் அனுமதி பெறப்படுகிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, நேற்று வட்டி விளம்பரம் செய்தவர்கள் தொழுகை ஆரம்பித்த பிறகே ஒவ்வொரு இருசக்கர வாகனத்திலும் வட்டி கடையின் விசிட்டிங் கார்டு மாட்டிவிடபட்டது என பலர் தகவல் தெருவிக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் இதுபோன்று இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட மற்றும் இதுபோன்ற கண்டிக்கத்தக்க விஷயங்கள் குறித்து துண்டு நோட்டீஸ் மற்றும் விசிட்டிங் கார்டு விநியோகம் செய்வோர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , பொதுமக்களும் இதுகுறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Your reaction