தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் பொதுவாகவே இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஊர் ஆகும்..
இங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு தெருவிற்கும் தனி, தனி சங்கங்கள் உள்ளன.
அந்தந்த சங்கங்களுக்கு உட்பட்டே அப்பகுதி மக்களும் நடக்கின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் இஸ்லாமிய மக்கள் தவிர்க்க வேண்டிய ஒரு முக்கிய அத்தியாவசிய விஷயம் என்றால் அது “வரதட்சணை” ஆகும்..
வரதட்சணையால் பல பெண்கள் இன்று வரை திருமணம் ஆகாமலும், அப்படியே திருமணம் ஆனாலும் கணவருடன் சேர்ந்து வாழமுடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம், ஒரே வழி இந்த வரதட்சணை கொடுமையை முற்றிலுமாக அளிப்பதுதான்.
இதற்கான ஒரு முக்கிய அறிவிப்பு பலகை கண்டிப்பான முறையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் வைக்கப்பட வேண்டும்.
இதற்கான முதல் வழியாக நிக்காஹ் திருமணம் ஏற்பாடு செய்வோரின் கவனத்திற்கு என்று பலகையில் கீழே உள்ள வாசங்கங்கள் அமைந்திருக்க வேண்டும்.
உங்கள் குடும்ப திருமணங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்!
1). பெண்விட்டாரிடம் வரதட்சணை வாங்குதல் கூடாது.
2). பேண்டு வாத்தியம் வைக்கக்கூடாது.
3). இசை கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சி போன்றவைகள் நடத்த கூடாது.
4). வீடியோ எடுத்தல் கூடாது.
இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மஸ்ஜிதின் நிக்காஹ் தப்தர் மற்றும் NOC கண்டிப்பாக வழங்கப்பட மாட்டாது.””
ஆகிய வாசங்கள் அமைந்த அறிவிப்பு பலகை அதிரையில் உள்ள அனைத்து சங்கங்கலும் செயல்படுத்த தயாரா..??
இந்த தகவலை வெறும் அறிவிப்பு பலகையாக வைகாமல் இதனை முற்றிலும் செயல்படுத்த சங்க நிர்வாகங்கள் தயாரா..??
Your reaction