2 நாட்களுக்கு அதிகனமழை.. சென்னை, டெல்டாவில் வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெருவதன் காரணமாக நவம்பர் 10,11ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் 20 செமீ அளவிற்கு மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்ககடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி