வீடு திரும்பினார் விஜயகாந்த்!

Posted by - May 20, 2021

மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கொரோனா இரண்டாம் அலை தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து , சினிமா பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் என்ற தகவலை அடுத்து தேமுதிகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)