கொரோனாவால் இறந்த இந்து சகோதரரின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம்கள் – ரம்ஜான் தினத்திலும் தலைத்தோங்கும் மனிதநேயம்!

Posted by - May 13, 2021

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த ஹிந்து சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை உயிரிழந்தார். கொரோனா தொற்றால் மரணமடைந்தவர் என்பதால் அவரை அடக்கம் செய்வதற்கு, அவரின் குடும்பத்தினர் தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். உடனே அக்குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று நோன்பு பெருநாள் என்றும் பாராமல், தமிழக சுகாதாரத்துரையின் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அவரின் உடலை தவ்ஹீத் ஜமாஅத்தினர் அடக்கம் செய்தனர். இப்பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்

Read More

தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!!

Posted by - May 13, 2021

கடந்த மாதம் 13ம்தேதி ரமலான் பிறை பார்க்கப்பட்டு முஸ்லிம்கள் நோன்பை துவங்கினர்.அதிகாலை முதல் பசித்து இருந்து சூரியன் மறைந்த பின் நோன்பு திறப்பார்கள். அதுவரை தண்ணீர் கூட அருந்தாமல் ஒரு மாத காலம் நோன்பு கடை பிடித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் குமரியில் பிறை தென்பட்டதாகவும், அதனால் இன்று வியாழக்கிழமை ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமையகம் அறிவிப்பு செய்திருந்தது. அதன்படி தஞ்சை தெற்கு

Read More

தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நீர் மோர் விநியோகம்!

Posted by - April 4, 2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் தஞ்சை மாநகர கிளை சார்பாக இன்று 04/04/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நீர் மோர் விநியோகம் நடைபெற்றது. பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் (அத்தீனுன் நஸிஹா) என்ற நபிகள் நாயகத்தின் சொல்லிற்கேற்ப இப்பணி நடைப்பெற்றது. இந்நிகழ்விற்கு கிளை தலைவர் செய்யத் முஸ்தபா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல்லாஹ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.கிளை

Read More

மதுக்கூரில் ததஜ-வின் மாவட்ட மாநாடு மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி !(படங்கள்)

Posted by - March 28, 2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மதுக்கூரில் யார் இவர் ? என்ற தலைப்பில் மாபெரும் மாவட்ட மாநாடு மற்றும் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் மூன்றாவதாக தஞ்சை மாநகர பகுதிக்கான அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மதுக்கூர் பூண்டியார் திடலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள்

Read More

தஞ்சையில் கொரோனாவால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த TNTJ-வினர் !

Posted by - February 23, 2021

தஞ்சையை சேர்ந்த ஒருவர், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற்று, கொரோனாவால் இறந்த நபரின் உடலை தஞ்சை தெற்கு மாவட்ட TNTJ-வினர் நல்லடக்கம் செய்தனர்.

Read More

கல்யாணராமனை கண்டித்து ஆவணத்தில் தெருமுனைக் கூட்டம் !

Posted by - February 3, 2021

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவாக பேசியும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள், கல்யாணராமனை கண்டித்து மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்யாணராமனை கண்டித்து ஆவணத்தில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு ஆவணம் கிளை செயலாளர் யூசுப் தலைமை வகித்தார். தமிழ்நாடு

Read More

கல்யாணராமனை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்திய TNTJ-வினர் !(படங்கள்)

Posted by - February 1, 2021

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார். இதனால் கொதித்தெழுந்த இஸ்லாமியர்கள் நேற்று முதல் தமிழகம் முழுவதும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் இறைத்தூதரை இழிவாக பேசி வரும் கல்யாணராமனை கண்டித்தும், அவரை

Read More

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கூரில் TNTJ நடத்திய இரத்ததான முகாம் !(படங்கள்)

Posted by - January 26, 2021

72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் 88 இடங்களில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 37ஆவது இரத்ததானமுகாம் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையில் இன்று (26/01/2021 ) மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தலைமையில் மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலையில் நடைபெற்றது. மதுக்கூர் காவல் ஆய்வாளர் கார்திகேயன், மீனாட்சி மருத்துவமனை டாக்டர் முஹம்மது பவாஸ், டாக்டர். சாஹிமா பேகம், சமூக ஆர்வலர்

Read More

சாதனை மாணவன் ரியாஸுதீனுக்கு TNTJ நிர்வாகிகள் நேரில் பாராட்டு !

Posted by - January 11, 2021

தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த மாணவர் ரியாஸுதீன், கடந்தசில நாட்களுக்கு முன்பு உலகின் எடை குறைந்த செயற்கைகோளை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவன் ரியாஸுதீனை இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டினர். மேலும் அடுத்தக்கட்ட பணிகளுக்கு உதவி தேவை என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகவும் என மாவட்ட தலைவர் ராஜிக் முகமது அவர்கள் கூறி உத்வேகப்படுத்தினார். பின்னர் துணை செயலாளர்கள் பாவா மற்றும் ஹாஜா ஜியாவுதீன் மறுமை வாழ்க்கை

Read More

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் !(படங்கள்)

Posted by - December 31, 2020

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் பட்டுக்கோட்டை நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். மேலும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)