CAAவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு(CAA) எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலினால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இந்திய குடியுரிமை சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்திய நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ராஜ்யசபாவில் CAA சட்டத்தை