தமிழகத்தில் நாளை முதல் 1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடக்கம்!
தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 1 ஆம் தேதி, முதல் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை திறக்கப்படும் நிலையில் அவர்களுக்கு இனிப்பு, மலர் கொத்து கொடுத்து வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்ததன் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பிறகு முதல் அலை முடிந்து இரண்டாவது அலை தொடங்கியது. அப்போது இருந்த அதிமுக ஆட்சி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறந்தது.