சென்னையில் கொரோனா பரவலை தடுக்க ராதாகிருஷ்ணன் IAS-ஐ களமிறக்கிய அரசு !
சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா தடுப்பு குழுவின் சிறப்பு முதன்மை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணியில் இவர் முக்கியமான ஆலோசனைகளை வழங்குவார். சென்னையில் கடந்த 4 நாட்களாக கொரோனா மிக மோசமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 176 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா