சிக்கன் கிரேவியுடன் குளிர்பானம் – தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம்!
தூத்துக்குடியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் சாப்பிட்ட உணவுப் பொருட்கள் இரண்டும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் இளங்கோவன் மனைவி கற்பகம். கற்பகம் அவரது மகள் தர்ஷினியும் அருகே உள்ள ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளனர். வீட்டில் தயாரித்து வைத்திருந்த உணவுடன் சேர்த்து சிக்கன் கிரேவி சாப்பிட்ட இருவரும் அதன் பிறகு வயிறு எரிச்சல் இருந்தால் பக்கத்து