காலை 11 மணி : தஞ்சை மாவட்ட தொகுதிகளின் முன்னிலை நிலவரம்!

Posted by - May 2, 2021

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 11 மணி முன்னிலை நிலவரம் : பாபநாசம் : அதிமுக முன்னிலை பட்டுக்கோட்டை : திமுக முன்னிலை ஒரத்தநாடு : அதிமுக முன்னிலை பேராவூரணி : திமுக முன்னிலை திருவிடைமருதூர் : அதிமுக முன்னிலை கும்பகோணம் : திமுக முன்னிலை தஞ்சாவூர் : திமுக முன்னிலை திருவையாறு : திமுக முன்னிலை

Read More

மதுக்கூரில் ததஜ-வின் மாவட்ட மாநாடு மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி !(படங்கள்)

Posted by - March 28, 2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மதுக்கூரில் யார் இவர் ? என்ற தலைப்பில் மாபெரும் மாவட்ட மாநாடு மற்றும் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் மூன்றாவதாக தஞ்சை மாநகர பகுதிக்கான அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மதுக்கூர் பூண்டியார் திடலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள்

Read More

கொரோனா பரவல் – தஞ்சையில் பள்ளிகள் மீது அபராதம், வழக்குப்பதிவு !

Posted by - March 20, 2021

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் என 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இதுவரை தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 142 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் கொரோனா பரவலை கண்காணிக்க 14 குழுக்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத

Read More

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளில் கொரோனா பரவல் !

Posted by - March 17, 2021

தஞ்சாவூர் அருகே 56 மாணவிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே தஞ்சை மாவட்டத்தில் மேலும் இரண்டு பள்ளிகளில் கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 460 மாணவிகளுக்கும் கடந்த 11ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) முதற்கட்டமாக 20 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில்

Read More

ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு போர்த்திய விஷமிகள் !

Posted by - March 1, 2021

ஒரத்த நாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு காவி துண்டு போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவித்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெரியார் சிலைக்கு காவி சாயம், செருப்பு மாலை என விஷமிகள் சிலர் தொடர்ந்து விஷம செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்த நபர் , கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றி பிரச்சினையை

Read More

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் !(தீர்மானங்கள்)

Posted by - November 9, 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 8/11/2020 ஞாயிற்றுக்கிழமை வி.பி.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வல்லம் ஜாபர் அலி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் தாவூத்கைஸர், மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் கோவை அப்துர் ரஹீம் ஆகியோரும் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், அனைத்துக் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில்

Read More

புதுப்பட்டினத்தில் TNTJ சார்பில் பேரிடர் கால ரத்ததான முகாம் !

Posted by - September 2, 2020

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் பேரிடர் கால இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 130வது பேரிடர் கால இரத்ததான முகாம் தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சார்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.

Read More

தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாத் சார்பில் 105வது ரத்ததான முகாம் !(படங்கள்)

Posted by - August 26, 2020

நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 105வது இரத்ததான முகாம் தஞ்சை மாவட்டம் கண்டியூர், முஹம்மத் பந்தர், திருப்பந்துருத்தி கிளைகள் சார்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இதில் 100க்கும்

Read More

தஞ்சையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

Posted by - June 29, 2020

பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை கண்டித்து தஞ்சையில் பனகல் கட்டிடம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவலால் மக்கள் அவதியுறும் நிலையில் அனுதினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஏற்றி வருகிறது.இதனை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேசம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பூண்டி வாண்டையார் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் விலைவாசி உயர்வை

Read More

சுயஊரடங்கை அறிவித்த கிராமம் – டாஸ்மாக் கடையையையும் அடைக்க உத்தரவிட்டு நெகிழ வைத்த தஞ்சை கலெக்டர் !

Posted by - June 24, 2020

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டிருக்கும் நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக அப்பகுதியினர் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை அறிவித்து கடைகளை அடைத்தனர். மேலும், அப்பகுதியிலிருந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைத்ததையடுத்து, அந்தக் கடையும் மூடப்பட்டது. தஞ்சாவூரிலில் நாளுக்குநாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)