தமிழக லாக்டவுனில் சில தளர்வுகள் அறிவிப்பு !

Posted by - May 12, 2021

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த மே 10-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன், அத்தியவாசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. பழ கடைகள் திறப்பு, நாட்டுமருந்து கடைகள் திறக்க அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக

Read More

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

Posted by - May 11, 2021

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்றுமுதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கைக் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தைச் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணம், இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி தேதி வரும் 10ஆம்

Read More

சென்னையில் கொரோனா சிகிச்சையளிக்க தயாராகும் மசூதி – அனைத்து தரப்பு மக்களும் சிகிச்சை பெறலாம்!

Posted by - May 11, 2021

சென்னையில் அதிகளவில் பரவும் கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் விதமாக சென்னை அண்ணா நகரில் இருக்கும் பள்ளிவாசலை முழுமையாக கொரோனா சிசிச்சை மையமாக மாற்ற அந்த பள்ளியின் நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான பூர்வாங்க பணிகளை முன்னெடுத்து உள்ளது. இதில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை தமிழக அரசின் சுகாதார அமைச்சகம் வழிகாட்டியுள்ள படி செய்து முடிக்கப்பட்டு இருக்கிறது. முற்றிலும் இலவச சேவையாக இயங்க உள்ள

Read More

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!

Posted by - May 11, 2021

தமிழக எதிர்க்கட்சி தலைவரை தேர்வுசெய்ய 3 மணிநேரமாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நிறைவுபெற்றது.கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஆலோசனை கூட்டத்தின்போது எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. கடந்த 3 மணிநேரமாக நடைபெற்ற கூட்டம் தற்போது நிறைவுபெற்றது. கூட்டத்தின் முடிவில் கட்சியின்

Read More

பொறியியல் தேர்வெழுதிய அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

Posted by - May 10, 2021

அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்திருக்க வேண்டிய செமஸ்டர் தேர்வுகளை, கொரோனா பரவல் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் தள்ளி வைத்தது. இதைத் தொடர்ந்து, செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் இணைய வழியில் நடத்தப்பட்டன. அதில், 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தேர்வு முடிவுகளை கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு, தேர்வு எழுதிய பாடத்துக்கு அருகே தேர்ச்சி அல்லது தோல்வி என்று

Read More

ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள்!

Posted by - May 10, 2021

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏக்களாக தேர்வாகியுள்ளதால் ராஜ்யசபா எம்பி பதவியை கே பி முனுசாமியும் வைத்திலிங்கமும் ராஜினாமா செய்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின. இதில் திமுக மற்றும் அதிமுக தலா 3 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். அந்த வகையில் அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கூட்டணி கட்சியான தமாகாவின் ஜி கே வாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக

Read More

தமிழக அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா உறுதி!

Posted by - May 10, 2021

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில், இன்று மற்றொரு அமைச்சருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இருவருமே அமைச்சரவையில் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சராக பதவியேற்ற இரண்டு நாட்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால் அவர்கள் இருவரது அலுவலகங்களும் தலைமைச் செயலகத்தில் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனிடையே அமைச்சர்கள் இருவருக்கும்

Read More

கொரோனா உதவித்தொகை ரூ.2,000 வழங்கும் திட்டம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Posted by - May 10, 2021

கொரோனா நிவாரண உதவித் தொகையாக முதல் கட்டமாக ரூ2,000 வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாத்து, ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கருணாநிதி பிறந்த நாள் அன்று ரூபாய் 4,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார். இத்தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு,

Read More

நிவாரண நிதி அளித்த சிறுவன் – சைக்கிள் பரிசளித்து சிறுவனுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர்!

Posted by - May 10, 2021

மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஸ் வர்மன். 7 வயதாகும் இந்தச் சிறுவன், தான் சேர்த்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும், கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து சிறுவன் ஹரிஸ் வர்மன் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சைக்கிள் வாங்கச் சேர்த்து வைத்த பணத்தை அனுப்பினேன். கொரோனா தொற்று

Read More

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு : எவை இயங்கும் ? எவை இயங்காது ? முழு விவரம்!

Posted by - May 10, 2021

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 நெருங்கும் நிலையில், மாநிலத்தில் இன்று முதல் வரும் மே 24ஆம் தேதி தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2ஆம் அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நான்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)