தேசத்துரோக சட்டத்துக்கு தடை ; வழக்கு பதிய கூடாது – உச்ச நீதிமன்றம் அதிரடி!

Posted by - May 11, 2022

தேசத்துரோக சட்டப் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். இச்சட்டத்தின் கீழ் எவ்வித வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. ஒம்பத்கரே இந்த தேச துரோக சட்ட பிரிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். கர்நாடகத்தை சேர்ந்த இவர் தாக்கல் செய்த மனுவில், தேசத்துரோக சட்டம் 124-ஏ பிரிவை நீக்க வேண்டும். இது அரசியலமைப்பு சட்டத்தை எதிரானது.

Read More

சமூக ஊடகத்தில் உதவி கேட்டால் நடவடிக்கையா ? வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்!

Posted by - May 1, 2021

கொரோனா தடுப்பூசிகள் விவகாரம், சமூக ஊடகங்களில் உதவிகள் கோரினால் நடவடிக்கைகள் எடுப்பது ஆகியவற்றை முன்வைத்து சரமாரியான கேள்விகளை உச்சநீதிமன்றம் நேற்று எழுப்பியுள்ளது. கொரோனா தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. நேற்றைய வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்- முன்வைத்த விமர்சனங்கள் : கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சி, மேம்பாட்டில் மத்திய அரசு என்னதான் பங்களிப்பு செய்துள்ளது ?

Read More

‘கும்பமேளா, தேர்தல் பொதுக்கூட்டங்களை உச்சநீதிமன்றம் தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது’ – சிவசேனா!

Posted by - April 25, 2021

ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றிருக்காது என சிவசேனா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலை மோசமாகி கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும்பாலான நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில்

Read More

‘தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சரியானது ; அரசியல் சாசன பாதுகாப்பு பெற்றது’ – உச்சநீதிமன்றம் !

Posted by - March 23, 2021

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு சரியானதுதான்; அரசியல் சாசனத்தின் பாதுகாப்பைப் பெற்றுள்ளது; தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீட்டு வரம்பை தாண்டி செல்லலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் மராத்தி ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் மராத்தா இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர்

Read More

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

Posted by - January 12, 2021

மறு அறிவிப்பு வரும் வரை, மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க குழு அமைத்தும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்தக் குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேவேளையில், நாடாளுமன்றத்தில் 2 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)