‘கொலை மிரட்டல் விடுக்கும் பாஜகவினர் ; வாயை மூட மாட்டேன்’ – சித்தார்த் அதிரடி!
தமது போன் நம்பரை பாஜக உறுப்பினர்கள் வெளியிட்டதாகவும், அதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், தன்னுடைய குடும்பத்தினருக்கும் தனக்கும், பலாத்காரம், கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்ததாகவும் நடிகர் சித்தார்த் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை கூறியுள்ளார் சமீப காலமாகவே அரசியல் சார்ந்த கருத்துக்களை நேரடியாகவும், அதை சற்று காட்டமாகவும், எடுத்துரைத்து வருபவர் நடிகர் சித்தார்த். தென்னிந்திய நடிகர் என்றாலும், சித்தார்த் என்றால் வடமாநிலங்களிலும் அறியப்படுபவர்தான். அப்படியே யாராவது அறியாவிட்டாலும், இவரது ட்வீட்கள் இவர் யாரென்று பளிச்சென