‘கும்பமேளா, தேர்தல் பொதுக்கூட்டங்களை உச்சநீதிமன்றம் தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது’ – சிவசேனா!
ஹரீத்வார் கும்பமேளா மற்றும் மேற்கு வங்க தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் நடந்து கொண்டிருந்தால் இன்று நாட்டில் கொரோனா பரவல் இந்த அளவுக்கு மோசமான நிலைக்கு சென்றிருக்காது என சிவசேனா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலை மோசமாகி கொண்டே செல்கிறது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெரும்பாலான நோயாளிகள் இறக்க நேரிடுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில்