வழக்கு பாயலாம் என்கிற அச்சமா ? சாட்டை துரைமுருகன் கைது நேரடியாக கண்டனம் தெரிவிக்காத சீமான்!
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். தக்கலை பொதுக்கூட்டத்தில் தாமும் பங்கேற்றிருந்ததால் தம் மீதும் நடவடிக்கை பாயலாம் என்பதால் சாட்டை துரைமுருகன் கைதுக்கு சீமான் நேரடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக கனிம வள கொள்ளைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர்