அதிரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரணப்பொருள் வழங்கல்!
அதிராம்பட்டினத்தில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நகரின் முக்கிய தெருக்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் காரணமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மிகுந்த அவதிக்கு உள்ளான ஏரிபுறக்கரை மஸ்னி நகரில் உள்ள 50 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக கைலி, போர்வை அடங்கிய பை பொதிகள் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn. A. ஜமால் முகமது, முன்னாள் தலைவர்