அதிரையில் குழந்தைகளை குறிவைத்து திருட்டு! தங்க வளையல்கள் கொள்ளை!!
அதிராம்பட்டினத்தில் ஈத் பெருநாள் நேற்று(14-05-21) கொண்டாடப்பட்டது. அப்போது புதுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் தொழுவதற்கு அனுமதி கோரியுள்ளனர் . தொழுவதற்கு அனுமதி அளித்துள்ளனர் அவ்வீட்டினர். ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றிய பின் அவ்விருவரும் அங்கிருந்து அவசரகதியாக கிளம்பியுள்ளனர். இதனை அவ்வீட்டினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனிடையே திடீரென அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை காணாமல் போயுள்ளது. உடனே குழந்தையை பெற்றோர் தேடியுள்ளனர்.