ராஜ்யசபா இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழகத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி.யாக இருந்த முகம்மது ஜான் மறைவால் காலியான ராஜ்யசபா இடத்துக்கு புதுக்கோட்டை அப்துல்லாவை வேட்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். அப்துல்லாவை எதிர்த்து அதிமுக வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யானார் புதுக்கோட்டை அப்துல்லா. அதேபோல் அதிமுக எம்.பி.க்களாக இருந்த வைத்திலிங்கம், முனுசாமி இருவரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாகினர்.