தமிழகத்தில் துளிர்த்த நம்பிக் ‘கை’ !
நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி திரும்புகிறது திமுக. ஆனால், திமுக மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மகிழ்ச்சி தருகிற வகையில்தான் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சிதான். கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே அக்கட்சிக்கு குறைந்த இடங்கள்தான் வழங்க வேண்டும் என்று பல முனையிலிருந்தும் குரல்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களே முந்தைய தேர்தல்களில் அக்கட்சிகள் செயல்பாட்டை