அதிரை : கொட்டும் மழையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக SDPI நடத்திய ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி அருகே பல லட்சக்கணக்கான விவசாயிகள், கடந்த 39 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் விவசாயிகளின் விரோதி மோடி என்ற தலைப்பில் டிச. 26 முதல் ஜன. 5 வரை SDPI கட்சி மாபெரும் பிரச்சாரப் பயணத்தை முன்னெடுத்து நடத்தி