அதிரையில் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

Posted by - February 22, 2021

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தில் ரேஷன் கடை ஊழியர் மரணமடைந்தது குறித்து காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சந்தேகத்தின்பேரில் கடற்கரைத்தெரு இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. பட்டுக்கோட்டை DSP புகழேந்தி கணேஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நள்ளிரவில் வீட்டை உடைத்து கைது செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. காவல்துறையில் இந்த நள்ளிரவு அத்துமீறலை கண்டித்து அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் சார்பில்

Read More

கல்யாணராமனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – அதிரையர்களுக்கு அழைப்பு !

Posted by - February 10, 2021

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசியிருந்தார். இந்நிலையில் கல்யாணராமனை கண்டித்து வரும் 12/02/2021 வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அதிரையில் உள்ள அனைத்து முஹல்லாவாசிகளும் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என பட்டுக்கோட்டை ஒருங்கிணைந்த முஸ்லீம் ஜமாஅத் சார்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.

Read More

கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்த அதிரை !(படங்கள்)

Posted by - February 5, 2021

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவாகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியிருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பாஜக கல்யாணராமனை கண்டித்து இஸ்லாமியர்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் இறைத்தூதரை இழிவாக பேசிய கல்யாணராமனை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யகோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா மற்றும் அனைத்து

Read More

அதிரையில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - February 4, 2021

பாஜக ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாக பேசி, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கல்யாணராமனை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் அதிரையில் நாளை மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதிரை பேருந்து நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை (05/02/2021) அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரை ஹாரூன் மௌலானா, மருது மக்கள் இயக்க நிறுவனர் செ. முத்துப்பாண்டி, மதநல்லிணக்க பேச்சாளர் அய்யாவழி பாலமுருகன் ஆகியோர்

Read More

கல்யாணராமனை கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்திய TNTJ-வினர் !(படங்கள்)

Posted by - February 1, 2021

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார். இதனால் கொதித்தெழுந்த இஸ்லாமியர்கள் நேற்று முதல் தமிழகம் முழுவதும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் இறைத்தூதரை இழிவாக பேசி வரும் கல்யாணராமனை கண்டித்தும், அவரை

Read More

வேளாண் சட்டங்களை அரசு வாபஸ் பெரும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் திட்டவட்ட அறிவிப்பு !

Posted by - January 12, 2021

வேளாண் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை வரவேற்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் வேளாண் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். ஜனவரி 15ம் தேதி மத்திய அரசுடன் திட்டமிட்டப்படி பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர்கள் கூறினர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து

Read More

அதிரை : கொட்டும் மழையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக SDPI நடத்திய ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

Posted by - January 3, 2021

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி அருகே பல லட்சக்கணக்கான விவசாயிகள், கடந்த 39 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் விவசாயிகளின் விரோதி மோடி என்ற தலைப்பில் டிச. 26 முதல் ஜன. 5 வரை SDPI கட்சி மாபெரும் பிரச்சாரப் பயணத்தை முன்னெடுத்து நடத்தி

Read More

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு – அதிரையில் தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

Posted by - December 22, 2020

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிரை நகர தமுமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில துணை செயலாளர் அதிரை அஹமது ஹாஜா, தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது, தமுமுக மாநில பொறுப்பாளர் திருச்சி ரபீக், தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேக்முகைதீன் ஆகியோர்

Read More

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

Posted by - December 16, 2020

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராகவும், அதனை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை ரயில் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தலைமை வகித்தார்.

Read More

அமலாக்கத்துறையை கண்டித்து பட்டுக்கோட்டையில் PFI நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

Posted by - December 11, 2020

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய நிர்வாகிகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த டிசம்பர் 3 அன்று அமலாக்கத்துறை (E.D) சோதனையில் ஈடுபட்டது. இந்த சோதனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று 11.12.2020 நடைபெற்றது. அரசு அமைப்புகளான என்.ஐ.ஏ, இ.டி, சி.பி.ஐ போன்றவற்றை ஆர்.எஸ்.எஸ் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, அந்த அமைப்பிற்கு எதிரான கொள்கைகளை கொண்டவர்களை, மேற்கண்ட அரசு அமைப்புகளை கொண்டு மிரட்டுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)