அதிரையில் அஸ்தமிக்கிறதா அதிமுக?

Posted by - January 27, 2022

பிப்ரவரி 19 ம் தேதி நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பம்பரமாய் சுழன்று வரும் இவ்வேளையில் அதிரையில் அதிமுகவினர் மெளனம் காத்து வருகிறார்கள். இந்த நிலையில் நடை பெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் எந்த களப் பணியையும் முன்னெடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு தொண்டர்களால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து அதிமுகவின் முக்கிய நபர் ஒருவர் கூறுகையில் விரைவாக தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கும் எனவும்,

Read More

‘வெறி பிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது’ – ஹெச். ராஜா குறித்த கேள்விக்கு அமைச்சர் பிடிஆர் அதிரடி!

Posted by - May 22, 2021

வெறிபிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா குறித்த கேள்விக்கு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் ஈஷா யோகா மையம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதனையடுத்து ஜக்கி வாசுதேவ் குறித்து புதிய தகவல்கள் வரும்

Read More

நம்மவர் நல்லவர் : கோவை வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு!!

Posted by - May 2, 2021

மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் படி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ஆகியோரை விட அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.

Read More

தமிழக சட்டமன்றத்தேர்தல் : அரசியல் தலைவர்களின் வாக்குப்பதிவும், கருத்தும்!

Posted by - April 6, 2021

தமிழகத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். குடும்பத்தினருடன் வாக்களிக்க வந்த தலைவர்கள், வாக்களித்துவிட்டு தங்களின் கருத்துகளை பகிர்ந்தனர். முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி: தமிழக முதல்வரும் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் சிலுவம்பாளையம் தொடக்க நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது, “தமிழக வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையினை

Read More

திமுகவின் கோட்டையாகிறது அதிரை நகரம் : உச்சகட்டத்தில் தேர்தல் களம்!!

Posted by - March 31, 2021

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் பிரச்சார பணிகளில் அனைத்து அரசியல்கட்சிகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர், அமமுக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் கா.அண்ணாதுரை, அதிமுக சார்பில் போட்டியிடும் என்.ஆர்.ரெங்கராஜன் ஆகியோருக்கு கடும் நேரடி போட்டி இருக்க வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ், பட்டுக்கோட்டை தொகுதியில்

Read More

ரஜினியின் 30 ஆண்டுகால ‘அரசியலை’ முடித்து வைத்த கொரோனா !

Posted by - December 29, 2020

தமிழக அரசியலில் 30 ஆண்டுகாலமாக நீடித்து வந்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்கிற சஸ்பென்ஸை ஒருவழியாக கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று முடித்து வைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர். காலம் முதலே ரஜினிகாந்தின் அரசியல் வருகை பேசுபொருளாக இருந்து வருகிறது. 1990களுக்குப் பிறகு ரஜினிகாந்தின் அரசியல் வருகை என்பது விவாதத்துக்குரியதானது. 1996 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு அலை இருந்தது. அதனால்தான் காங்கிரஸ் கட்சியே உடைந்து தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. காக்கா உட்கார

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)