பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை முதல்வர் சாத்தியப்படுத்த வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்!
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரம்சட்டத்துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிப்பதாகவும், பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை தமிழக முதல்வர் சாத்தியப்படுத்த வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று, கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் அறிவிப்புச் செய்தது நீண்டநாள் சிறைவாசிகள் குறிப்பாக