‘நாளை எம்எல்ஏ-க்கள் கூட்டம் ; ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா’ – மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று வெளியானது. திமுக கூட்டணி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக அரியணையில் அமரப்போகிறது. காலை முதலே திமுக முன்னணியில் இருந்தது. தேர்தல் வெற்றி முடிவுகள் தெரிந்த உடன் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் அறிவாலயத்தில் கூடினர். கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்த நிலையிலும் உற்சாகமாக பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர். கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில்