மீனவர்களுடன் சகஜமாக பழகி மீன்பிடித்து மகிழ்ந்த ராகுல் காந்தி !(படங்கள்)

Posted by - February 25, 2021

கேரளாவில் உள்ள வயநாடு ராகுல் காந்தியின் சொந்த தொகுதி என்பதால் அடிக்கடி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் 3 நாள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி கேரளா வந்து சென்றார். கொல்லத்தில் நேற்று மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக கூறினார். விவசாயிகளுக்கு மத்திய அரசில் தனி அமைச்சகம் உள்ளது. ஆனால் மீனவர்களுக்கு அது இல்லை என்று குறிப்பிட்ட ராகுல்

Read More

கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

Posted by - February 25, 2021

கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த சூழலில் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்பட பல்வேறு மாநில அரசுகள், கேரளா, மகாராஷ்டிராவில்

Read More

‘குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது’ – கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டம் !

Posted by - February 14, 2021

கேரளாவில் என்ன நடந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2015ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவுக்குள் வந்த மத சிறுபான்மை அகதிகளுக்குக் குடியுரிமையை வழங்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்தது. ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் ஒதுக்கும் வகையில் இந்தச் சட்டம் இருப்பதாகக் கூறிநாடு முழுவதும் இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன.

Read More

‘தூய்மை பணியாளர் டூ பஞ்சாயத்து தலைவர்’ – கேரள உள்ளாட்சித் தேர்தலில் சாதித்த பெண் !

Posted by - January 1, 2021

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பத்தனபுரம். இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்தவள்ளி (வயது 46). அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனந்தவள்ளி போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்று பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பட்டியலின பெண்ணான ஆனந்தவள்ளி கடந்த 10 ஆண்டுகளாக அதே பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர தூய்மை பணியாளராக வேலைசெய்துள்ளார். இந்த வெற்றி குறித்து ஆனந்தவள்ளி கூறுகையில்

Read More

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம் !

Posted by - December 31, 2020

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரளா சட்டசபையில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் புதிய விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேரளா சட்டசபை தீர்மானம் வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்க்கையே நாசமாகும் என்பதுதான் எதிர்ப்புக்கு காரணமாகும். கார்ப்பரேட் நலன்களை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள விவசாய சட்டங்களை கைவிட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல

Read More

கேரளா உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி – பாஜகவுக்கு படுதோல்வி !

Posted by - December 16, 2020

கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மாலை 4 மணி நிலவரப்படி : 6 மாநகராட்சிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 4 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 2 இடங்கள்86 நகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 35 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 45 இடங்கள்;

Read More

கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசம் – முதல்வர் பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு !

Posted by - December 13, 2020

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் கேரளா மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை வீசுகிறது. தடுப்பூசி எப்போது கிடைக்கும் என அந்த மாநில மக்கள் உள்பட நாடு முழுவதும் அனைவரும் காத்து இருக்கின்றனர். உலக நாடுகளை பாடுபடுத்தி வரும் கொரோனாவை ஒழிக்க பல நாடுகள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டன. இந்தியாவில் தடுப்பூசி

Read More

மூணாறு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் – கேரள முதல்வர் அறிவிப்பு !

Posted by - August 14, 2020

கேரள மாநிலம் மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு நிலச்சரிவில் சிக்கியது. இதில், 71 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவம் நடந்த அடுத்த நாளான ஆகஸ்ட் 7-ம் தேதி மதியம் முதல், மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதுவரை 55 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சூழலில், மேலும், 16 நபர்களின் உடல்களைத் தேடும் பணியில் மீட்புக் குழு 8-வது நாளாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில்,

Read More

மழைகாலங்களில் கோழிக்கோட்டில் பெரிய ரக விமானங்கள் தரை இறங்க தடை !

Posted by - August 12, 2020

மழை காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் தரை இறங்க தடை விதிக்கப்படுவதாக விமான இயக்குநரகம் அறிவித்துள்ளது. துபாயில் இருந்து கடந்த 7-ந் தேதி கோழிக்கோடு வந்த விமானம் மிகப் பெரிய விபத்துக்குள்ளானது. கொட்டும் மழையில் விமானம் தரை இறங்கிய போது விபத்தில் சிக்கி இரண்டாக பிளந்தது. இந்த கோர விபத்தில் மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே கோழிக்கோடு விமான நிலையம் போன்ற

Read More

கோழிக்கோட்டில் கோர விபத்து.. ரன்வேயில் வழுக்கி இரண்டாக பிளந்த விமானம் !(படங்கள்&வீடியோ)

Posted by - August 7, 2020

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து 180 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று இரவு 7.40 மணியளவில் வந்த ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளானது. கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கும் போது ஓடு பாதையை விட்டு விலகி ஏர் இந்தியா விமானம் விபத்துகுள்ளாகியது. விமானம் இரண்டு துண்டுகளான உடைந்து நொறுங்கியது. கனமழை பெய்ததால் ஓடுபதையில் இருந்து விமானம் சறுக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான விமானத்தில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)