“ஷாக் அடிப்பது – மின்சாரமா? மின்கட்டணமா?” – தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழகத்தில் அ.தி.மு.க அரசின் மின்கட்டண கொள்ளைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காணொலிக் காட்சியின் மூலம் மக்களிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தியுள்ளார். அந்த காணொலிக் காட்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை பின்வருமாறு: “வணக்கம்! ஒருபக்கம் கொரோனா வாட்டி வருகிறது என்றால், இன்னொரு பக்கம் மக்களை முதலமைச்சர் பழனிசாமி வாட்டி வதைக்கிறார். கொரானா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும்