BIG BREAKING: அதிரை நகராட்சி மன்ற துணைத் தலைவரானார் இராம.குணசேகரன்!!
அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவி கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தில்நவாஸ் பேகம் தான் நகரமன்ற துணை தலைவர் என சொல்லப்பட்டு வந்த சூழலில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நகர செயலாளர் இராம.குணசேகரன் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் கூட்டணி தர்மத்தை மீறி இராம.குணசேகரன் துணை தலைவராக வெற்றிபெற்றார்.