இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு !

Posted by - March 14, 2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, திருத்துறைப்பூண்டி – மாரிமுத்து தளி – ராமச்சந்திரன் திருப்பூர் வடக்கு – ரவி (எ) சுப்பிரமணியன் பவானிசாகர் – சுந்தரம் வால்பாறை – ஆறுமுகம் சிவகங்கை – குணசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Read More

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பால் பணிந்த திமுக !

Posted by - March 14, 2021

நேற்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டங்கள் எதிர்ப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மேலும் 5 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவதாக அக்கட்சி அறிவித்தது. அதன்படி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு திமுக அழுத்தமான குரல் கொடுக்கும்

Read More

காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

Posted by - March 14, 2021

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் மிக விரைவாக தேர்தல் பணியை செய்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. இந்த நிலையில் காங்கிரசும் 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று இரவு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி பொன்னேரி- துரை சந்திரசேகர் ஸ்ரீபெரும்புதூர்- செல்வபெருந்தகை சோளிங்கர்- முனிரத்தினம் ஊத்தங்கரை- ஆறுமுகம் கள்ளக்குறிச்சி-

Read More

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

Posted by - March 13, 2021

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களம் காண்கிறது. கூட்டணிக் கட்சிகள் சில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், மொத்தம் 188 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனிடையே நேற்று 173

Read More

திமுக சட்டமன்ற வேட்பாளர் அண்ணாதுரை அதிரைக்கு வருகை!

Posted by - March 13, 2021

பட்டுக்கோட்டை தொகுதி திமுக சட்டமன்ற வேட்பாளர் கா.அண்ணாதுரை இன்று மதியம் அதிராம்பட்டினத்திற்கு வருகைதந்தார். வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் திமுக அவை தலைவர் NKS சபிர், அதிரை நகர செயலாளர் இராம.குணசேகரன் ,அதிரை முன்னாள் பேரூர் தலைவர் அஸ்லம், துணை செயலர் அன்சார் கான், முல்லை மதி, MMS அப்துல் கரீம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.இதில் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் ,இளைஞர் அணி அமைப்பாளர்கள் உட்பட பலரும் நமது வெற்றி வேட்பாளர் அண்ணன் கா.அண்ணாதுரைக்கு பொன்னாடை போற்றி

Read More

ரூ.4000 உதவித்தொகை.. நகைக்கடன் தள்ளுபடி.. பெட்ரோல் ரூ.5 குறைப்பு – திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி !(முழு விவரம்)

Posted by - March 13, 2021

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக நேற்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸடாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முன்னதாக கருணாநிதி நினைவிடத்தில் தேர்தல் அறிக்கையை வைத்து மரியாதை செய்தார். அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “தேர்தல் அறிக்கையில் 500 திட்டங்கள் இருக்கிறது. அதில் முக்கியமானவற்றை அறிவிக்கிறோம்” என்றார். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் : திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய

Read More

திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர்கள் அறிவிப்பு !

Posted by - March 12, 2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மூன்று தொகுதிகளில் கொமதேக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருச்செங்கோட்டில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பெருந்துறையில் பாலூசாமி, சூலூரில் பிரிமியர் செல்வம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் கொமதேக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

முட்டி மோதும் திமுக-தமாகா : பட்டுக்கோட்டை யாருக்கு ?

Posted by - March 12, 2021

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், பட்டுக்கோட்டையில் திமுக, தமாகா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. என்னது, தமிழ் மாநில காங்கிரஸா என்று ஜெர்க் ஆகக் கூடாது. சாட்சாத் தமாகா-வே தான். திமுகவுக்கு இங்கு கடும் சோதனை காத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக இன்று தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று, ‘இது வேட்பாளர்கள் பட்டியல் அல்ல; திமுக வெற்றியாளர்கள் பட்டியல்’ என்றார். அவ்வளவு கான்ஃபிடன்ஸோடு பேசிய ஸ்டாலினுக்கே கிலி

Read More

ஆட்சிக்கு வந்ததும் நீண்டகால சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் – மு.க. ஸ்டாலினிடம் INTJ கோரிக்கை !

Posted by - March 12, 2021

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் பாசிசத்திற்கு எதிராக வாக்குகள் சிதறாமல் இருக்க திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை திமுக தலைவர் உடனான சந்திப்புக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், துணை தலைவர் முஹம்மது முனீர்,

Read More

திமுக கூட்டணியில் பாபநாசத்தில் போட்டியிடுகிறார் பேரா. ஜவாஹிருல்லாஹ் !

Posted by - March 12, 2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த இரண்டு தொகுதிகளில் மமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பாபநாசத்தில் மமக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ்வும், மணப்பாறையில் மமக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமதும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவ்விருவருமே உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)