வீடு திரும்பினார் விஜயகாந்த்!

Posted by - May 20, 2021

மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கொரோனா இரண்டாம் அலை தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து , சினிமா பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் என்ற தகவலை அடுத்து தேமுதிகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Read More

அமமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

Posted by - March 15, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன. அதிமுக, திமுக கூட்டணிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக அதிமுக 20 தொகுதிகளை கூட ஒதுக்க முன் வராததால் கூட்டணியில் இருந்து வெளியேறியது. பின்னர் டி.டி.வி தினகரனின் அமமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. முதலில் அமமுக-தேமுதிக இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை. இறுதியில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமுக முடிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து

Read More

அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு !(முழு விவரம்)

Posted by - March 14, 2021

தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும், கூட்டணி குறித்து இதுவரை

Read More

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக – விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு !

Posted by - March 9, 2021

2011 சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க.வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்துடன் 7.9 சதவீத வாக்குகளையும் பெற்றது. ஆனால், 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 3-வது அணியான மக்கள்நல கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க. படுதோல்வி அடைந்தது. கடந்த 2019 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றது. இந்த நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)