கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி திறக்கப்படும் – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு !

Posted by - May 5, 2020

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் வரும் கல்வியாண்டிற்கான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் திறப்பு தேதியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதன்படி நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 2020-2021ஆம் ஆண்டிற்கான வகுப்புகளை துவங்கலாம் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல்

Read More

மூன்றாம் கட்ட லாக்டவுன் : புதிய தளர்வுகள்.. தொடரும் தடைகள் – முழு விவரம் !

Posted by - May 2, 2020

இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது தொடர்பான அமைச்சரவைக் கூட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக நடந்த இந்தக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கை மே 17-ம் தேதி வரை நீட்டிப்பு செய்த மத்திய அரசின் முடிவை செயல்படுத்த

Read More

அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் இனி ஆரோக்ய சேது ஆப் கட்டாயம் – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு !

Posted by - May 2, 2020

நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுக்க மொத்தம் 37257பேர் வரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1123 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. மே 4ம் தேதியோடு முடிய வேண்டிய ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசு ஆரோக்யாசேது (AarogyaSetu)

Read More

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க ராதாகிருஷ்ணன் IAS-ஐ களமிறக்கிய அரசு !

Posted by - May 2, 2020

சென்னையில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தற்போது கொரோனா தடுப்பு குழுவின் சிறப்பு முதன்மை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணியில் இவர் முக்கியமான ஆலோசனைகளை வழங்குவார். சென்னையில் கடந்த 4 நாட்களாக கொரோனா மிக மோசமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 176 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா

Read More

கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் குடியிருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் !

Posted by - April 30, 2020

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மேலும் நோய் தொற்று ஏற்படாத வகையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் நெய்வாசல் பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நெய்வாசலில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் IAS நேரில் சென்று அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கினார். அப்போது

Read More

போரும் – கொரோனாவும் : உகாண்டா அதிபரின் உணர்ச்சிகரப் பேச்சு !

Posted by - April 30, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகில் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்றன. இந்தியா முழுவதிலும் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் மக்கள் பொழுதுபோக்குக்காக வெளியே சென்று கொண்டிருப்பதும், காவல்துறையினர் அவர்களைத் தடுத்துத் திருப்பி வீட்டுக்கு அனுப்புவதும் வாடிக்கையாக உள்ளது. சமூக இடைவெளியை இவர்களுக்குப் புரிய வைப்பதற்கே அரசுகள் பெறும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. பல நாடுகளிலும் இதே சூழ்நிலை தொடர்ந்து வந்த நிலையில்,

Read More

வளைகுடா நாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இந்தியா !

Posted by - April 29, 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பல வெளிநாடுகளில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கத் திட்டமிட்டு வருகின்றது. இப்பணியில் இந்திய விமானப்படையும், இந்தியக் கப்பல் படையும் களமிறங்க உள்ளன. மே 3 வரை இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதற்குப் பின் இந்த மீட்பு நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மீட்பு

Read More

பாதிக்கப்பட்ட அனைவரும் குணம்.. கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது ஈரோடு !

Posted by - April 28, 2020

ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 69 பேரும் குணமடைந்தனர். மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில் 69 பேர் குணமடைந்தனர். ஒருவர் மட்டும் மரணம் அடைந்தனர். இதனால் இன்று ஈரோடு மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி கடைசியாக புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்தது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறையில் உள்ள

Read More

தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க கேரளாவில் ஒரு புதுமையான திட்டம் !

Posted by - April 28, 2020

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் முதன்முதலாக கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது. அதேபோல் தொடக்க காலத்தில் கேரளாவில்தான் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தல், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பை கண்டறிதல், பரிசோதனையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் அம்மாநில அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.நோயாளிகளை குணப்படுத்தி அனுப்புவதிலும் முதன்மையான மாநிலமாக கேரளா செயல்படுகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் முற்றிலுமாக ஒழிக்க சில

Read More

‘கடுகு எண்ணெய்யை மூக்கில் ஊற்றினால் கொரோனா வைரஸ் சாகும்’ – பாபா ராம்தேவின் அடடே கண்டுபிடிப்பு !

Posted by - April 27, 2020

உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தன் கோரமுகத்தை இந்தியாவில் காட்டத் துவங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் யோகா சாமியார் பாபா ராம்தேவ் நேற்றைய தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”யாராவது ஒரு நிமிடம் மூச்சு விட முடியுமானால், அந்த நபர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என அர்த்தம். இது தவிர, உங்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)