கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

Posted by - February 25, 2021

கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த சூழலில் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்பட பல்வேறு மாநில அரசுகள், கேரளா, மகாராஷ்டிராவில்

Read More

தஞ்சையில் கொரோனாவால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த TNTJ-வினர் !

Posted by - February 23, 2021

தஞ்சையை சேர்ந்த ஒருவர், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து தமிழக அரசின் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற்று, கொரோனாவால் இறந்த நபரின் உடலை தஞ்சை தெற்கு மாவட்ட TNTJ-வினர் நல்லடக்கம் செய்தனர்.

Read More

‘கட்டாயப்படுத்தமாட்டோம்; விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி’ – சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி !

Posted by - January 13, 2021

நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ள நிலையில், புனேவில் இருந்து 9 விமானங்கள் மூலம் 56.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பாட்னா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், புனேவிலிருந்து விமானத்தில் 5.36 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 20,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் பலத்த பாதுகாப்புடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து, இந்த தடுப்பூசிகள் சென்னையில் உள்ள மாநில மருந்து

Read More

இந்தியாவிலும் தடம் பதித்த உருமாறிய கொரோனா – 20 பேருக்கு தொற்று உறுதி !

Posted by - December 30, 2020

இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இதுவரை வீரியமிக்க உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியாவில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 பேரும் லண்டனில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இப்போது தான் படிபடியாக இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புதிய அதிர்ச்சியாக லண்டனில்

Read More

கேரளாவில் கொரோனா தடுப்பூசி இலவசம் – முதல்வர் பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு !

Posted by - December 13, 2020

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் கேரளா மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் கேரளாவில் கொரோனா இரண்டாவது அலை வீசுகிறது. தடுப்பூசி எப்போது கிடைக்கும் என அந்த மாநில மக்கள் உள்பட நாடு முழுவதும் அனைவரும் காத்து இருக்கின்றனர். உலக நாடுகளை பாடுபடுத்தி வரும் கொரோனாவை ஒழிக்க பல நாடுகள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டன. இந்தியாவில் தடுப்பூசி

Read More

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை டிச. 7 முதல் திறக்க தமிழக அரசு அனுமதி – முழு விவரம் !

Posted by - November 30, 2020

தமிழகத்தில் டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமலில் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த லாக்வுடன் மேலும் ஒரு மாதத்திற்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு லாக்டவுனை

Read More

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார் !

Posted by - November 1, 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கன்னு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 72. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தும் அவரது உடல்நிலை மோசமடைந்துகொண்டே சென்றது. அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு 90% சதவீத நுரையீரல்

Read More

கொரோனா தொற்றுக்கு மத்தியில் வேகமாக பரவும் டெங்கு.. தமிழகத்தில் 1,785 பேருக்கு டெங்கு காய்ச்சல் !

Posted by - October 21, 2020

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 1,785 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கொரோனா தொற்று குறையாத நிலையில் டெங்குவும் வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவது சுகாதாரத்துறைக்கு சவாலானதாக உள்ளது. இந்நிலையில் மழைக்காலமும் தொடங்கிவிட்டதால் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும், நோய் தடுப்புப் பணிகளையும் முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு

Read More

இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்… எவை இயங்கலாம் ? எவை இயங்க தடை ? முழு விவரம் !

Posted by - September 1, 2020

தமிழகத்தில் இன்று முதல் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பும் வகையில் அரசு அன்லாக் 4.0 என்பதன் கீழ் தளர்வுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி என்னென்ன இயங்கலாம், என்னென்ன இயங்கக் கூடாது என்பதை பார்ப்போம். தமிழகத்தில் ஊரடங்கு இந்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அன்லாக் 4.0 என்ற பெயரில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பார்ப்போம். *இ பாஸ் முறை ரத்து. எனினும் மற்ற

Read More

பேருந்து போக்குவரத்து அனுமதி முதல் இ-பாஸ் ரத்து வரை – அன்லாக் 4.0வின் முக்கிய அம்சங்கள் !

Posted by - August 30, 2020

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதில், ஜூன் மாதம் முதல் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி நான்காம் கட்ட தளர்வுகள் குறித்து நேற்று மத்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில், தமிழகத்தில் தளர்வுகள் தொடர்பாக மாநில அரசு இன்று வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கு, மேலும் சில தளர்வுகளோடு (நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)